Categories
மாநில செய்திகள்

அரையாண்டு தேர்வு… விதிமுறைகள் வெளியீடு… தமிழக அரசு அறிவிப்பு..!!

தனியார் பள்ளிகள் ஆன்லைன் வழியாக அரையாண்டு தேர்வு நடத்திக் கொள்ளலாம் என்று அறிவித்து அதற்கான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தமிழக பள்ளிகளில் ஆகஸ்ட் செப்டம்பரில் காலாண்டு தேர்வும், டிசம்பரில் அரையாண்டுத் தேர்வும் நடத்தப்படும். இந்த ஆண்டு கொரோனா காரணமாக கடந்த 8 மாதங்களாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. மாணவர்கள் ஆன்லைன் மூலமாக கல்வி பயின்று வருகின்றனர். ஜனவரி முதல் பள்ளிகளை திறக்க முன்னேற்பாடு பணிகள் துவங்கியுள்ளன. முதல் கட்டமாக மாணவர்களை கையாளுவது குறித்தும், சுகாதாரத்தை பேணுவது குறித்தும் ஆசிரியர்கள் பயிற்சி துவங்கியுள்ளது.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதற்காக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்திருந்தார். தனியார் பள்ளிகள் மட்டும் விருப்பப்பட்டால் அரையாண்டுதேர்வு நடத்திக் கொள்ளலாம் என அனுமதி வழங்கப்பட்டதை தொடர்ந்து தனியார் பள்ளிகள் ஆன்லைன் மூலம் அரையாண்டு தேர்வு நடத்துவதற்கான விதிமுறைகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

இந்த தேர்வை நடத்த முதன்மை கல்வி அலுவலர்கள் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளனர். நடத்தப்பட்ட பாடங்களுக்கு மட்டும் தேர்வுகளை நடத்த வேண்டும். அதில் வரும் மதிப்பெண்களை வைத்து மாணவர்களின் தேர்ச்சி தொடர்பான முடிவுகளை எடுக்கக் கூடாது. தேர்வுக்காக தனியாக தேர்வு கட்டணம் வசூலிக்க கூடாது என அறிவுறுத்தியுள்ளது.

Categories

Tech |