தமிழ்நாடு அரசு தேர்வாளர் பணி ஆணையம் மூலம் வனத்தொழில் பழகுநர் தேர்வானது டிசம்பர் 4-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த தேர்வு மொத்தம் 7 மாவட்டங்களைச் சேர்ந்த மையங்களில் நடைபெறும் நிலையில், 4-ம் தேதி எழுத்து தேர்வாகவும் மற்ற நாட்களில் கணினி வழியிலும் தேர்வுகள் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை தற்போது டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.
இந்த ஹால் டிக்கெட் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனையடுத்து விண்ணப்பதாரர்கள் தங்களுடைய OTR டேஷ் போர்டு மூலமாக பதிவு எண் மற்றும் பிறந்த தேதி போன்றவற்றை பயன்படுத்தி ஹால் டிக்கெட் டவுன்லோட் செய்து கொள்ளலாம். மேலும் இந்த அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.