10, 11, 12ஆம் வகுப்பு பொத்தேர்வுக்கான ஹால்டிக்கெட் நாளை முதல் பெற்றுக்கொள்ளலாம் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூன் 15ம் தேதி தேர்வு தொடங்க இருக்கிறது. அதேபோல் பதினொன்றாம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்பட வேண்டிய ஒரு தேர்வு மற்றும் பிளஸ் டூ மாணவர்கள் இறுதித் தேர்வை தவறவிட்ட மாணவர்களுக்கான ஒரு தேர்வுகள் நடத்துவதற்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு விட்டன. தேர்வு எழுதும் மாணவர்களுக்கான ஹால்டிக்கெட் நாளை முதல் வழங்கப்படும் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
நாளை முதல் பள்ளிக்கு நேரில் சென்றோ அல்லது www.dge.gov.in என்ற இணையதளம் மூலமாகவோ ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்திருக்கிறார்கள். பள்ளி மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு ஹால் டிக்கெட்டை எப்படி பெற்றுக் கொள்ளலாம் என்பது குறித்து தெரிந்து கொள்ளலாம் அல்லது என்ற இணையதளத்தில் சென்று ஹால்டிக்கெட் என்ற லிங்கை கிளிக் செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என கூறியிருக்கிறார்கள்.