வெனிசுலாவில் இளைஞர்கள் பைக் சாகசங்கள் நடத்தி மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர்.
வெனிசுலாவின் தலைநகர் கராகஸ். இதன் கிழக்கிலிருந்து மேற்கு வரை பைக் சாகசங்கள் இளைஞர்களால் நடத்தப்பட்டது. இந்த சாகசமானது ஹாலோவீன் பண்டிகையை கொண்டாடும் விதமாக நடத்தப்பட்டுள்ளது. இதில் இளைஞர்கள் பல்வேறு விதமாக வேடமணிந்து லீவிங் போன்ற பைக் சாகசங்களை நடத்தினர்.
இதனை கண்ட பார்வையாளர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். குறிப்பாக வெனிசுலாவின் ஏழ்மையான மக்கள் வசிக்கும் பகுதிகளில் இது போன்று பைக் சாகசங்கள் பிரபலமாகி வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஹாலோவீன் பண்டிகையானது இறந்தவர்களை மகிழ்விப்பதற்காக கொண்டாடப்படுகிறது.