பிரிட்டனில் வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து ஹாலோஜென் பல்புகள் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டன் முழுவதும் ஹாலோஜென் பல்புகளுக்கு மாற்றாக ஃப்ளோரசன்ட் மின்விளக்குகள் உபயோகிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் வருடத்திற்கு 1.26 மில்லியன் டன் கார்பன் உமிழ்வை குறைக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இதன் மூலம் மின்சாரம் சேமிக்கப்படும்.
மக்களும் வருடத்திற்கு 75 டாலர்கள் வரை சேமிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கட்டுப்பாடுகளின் படி, கடந்த 2018 ஆம் வருடத்திலிருந்து அதிக ஆற்றல் செலவாகும், ஹாலோஜென் பல்புகள் உபயோகிப்பது, படிப்படியாக குறைக்கப்பட்டது. ஆனால் தற்போது இந்த வருட செப்டம்பரிலிருந்து மீதமிருக்கும் ஹாலோஜென் பல்புகளும் விற்பனை செய்ய கூடாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால் நாட்டில் குறைந்த அளவிலான மின்சக்தியை பெறும் எல்இடி விளக்குகள் உபயோகப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது விற்பனை செய்யப்படும் விளக்குகளில் மூன்றில் இரண்டு பங்கு எல்இடி விளக்குகளாக இருக்கிறது.
வரும் 2030ஆம் வருடத்திற்குள் விற்பனை செய்யப்படும் விளக்குகளில் 85% எல்இடி விளக்குகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. ஹாலோஜென் பல்புகளை காட்டிலும் எல்இடி விளக்குகள் 5 மடங்கு நீடிக்கக்கூடியது. அதே அளவுடைய ஒளி தான் தருகிறது. எனினும் 80 சதவீதத்திற்கும் குறைந்த ஆற்றலை தான் உபயோகிக்கிறது.