Categories
தேசிய செய்திகள்

கொள்ளையர்கள் கைவரிசை… 1.28 கோடி பணம்… செல்போன்கள்… இரு சக்கர வாகனங்கள் பறிமுதல்… 7 பேர் கைது…!!

தெலுங்கானாவில் கொள்ளையடித்த கும்பலிடமிருந்து பல லட்சம் மதிப்புள்ள செல்போன்கள், கோடிக்கணக்கில் பணம் மற்றும் 12 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

தெலுங்கானா மாநிலத்தில் பல பகுதிகளில் நடந்த கொள்ளை சம்பவங்களுடன் தொடர்பு கொண்ட 7 பேரை போலீசார் கைது செய்து  அவர்களிடம் இருந்து கோடிக்கணக்கான பணம், புதிய வகை செல் போன்கள், இரு சக்கர வாகனங்கள் போன்றவை கைப்பற்றியுள்ளனர். இவர்களில் முகமது அப்சார் மற்றும் மிர்சா அஸ்வக் பெய்க் என்ற இருவரும் சேர்ந்து, ஐதராபாத்தில் ரியல் எஸ்டேட் உரிமையாளரான அசாதுதீன் அகமது என்பவரின் வீட்டில், ரூ.2.5 கோடி பணம் உள்ளிட்டவற்றை கொள்ளையடித்து சென்றுள்ளனர்.  அவர்களுக்கு உதவியாக முகமது அமீர், இம்ரான் மற்றும் ரெஹ்மான் ஆகிய 3 பேரும் இருந்துள்ளனர்.

இதேபோல் வேறொரு கொள்ளை சம்பவத்தில் பையதுல்லா கான் மற்றும் சையது மஹபூப் அலி என்ற 2 பேரும் சேர்ந்து ஈடுபட்டு உள்ளனர்.  அவர்களிடம் இருந்து ரூ.14 லட்சம் மதிப்புடைய 57 புதிய வகை ஸ்மார்ட் போன்கள், இரு சக்கர வாகனம் மற்றும் அவர்களது 3 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், மற்றொரு கொள்ளை சம்பவத்தில் கைது செய்யப்பட்ட வெங்கடேஷ், வாசிம் அக்ரம் மற்றும் சிராஜ் கான் ஆகியோரிடம் இருந்து 12 இரு சக்கர வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

Categories

Tech |