Categories
சென்னை மாவட்ட செய்திகள்

பாதுகாப்பு துறையில் வேலை இல்லையா?…. மாற்றுத்திறனாளிகளின் போராட்டம் …. சென்னையில் பரபரப்பு…!!

சென்ட்ரல் இரயில் நிலையத்தை முற்றுகையிட்டு மாற்றுதிறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னையில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றுள்ளது. இந்த போராட்டத்திற்கு மாநில தலைவர் ப.ஜான்சிராணி தலைமை வகித்துள்ளார். மேலும் இந்த போராட்டத்தில் மாநில பொதுச் செயலாளர் எஸ். நம்பிராஜன் உள்பட 50 கலந்து கொண்டு பேசியுள்ளனர். இதுகுறித்து நம்பிராஜன் கூறும் போது அரசு பணிகளில் 4 சதவீத இட ஒதுக்கீடு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது என்றும், மத்திய மாநில அரசுகளின் எல்லாப் பிரிவுகளிலும் 4 சதவீத இட ஒதுக்கீட்டில் மாற்றுத்திறனாளிகள் பணியமர்த்தப்பட்டு வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.

ஆனால் தற்போது மத்திய அரசானது ஐபிஎஸ், ரயில்வே பாதுகாப்பு படை, சி.ஆர்.பி.எஃப் போன்ற பணிகளில் மாற்றுத்திறனாளிகள் நியமிக்கப்பட தடை விதித்து உள்ளது. இந்த நடவடிக்கையால் பாதுகாப்புத்துறை சம்பந்தப்பட்ட எந்தவொரு பணியிலும் மாற்றுத்திறனாளிகள் வேலை செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இனிவரும் காலகட்டங்களில் பாதுகாப்புத்துறை சார்ந்த பணியிடங்களில் மாற்றுத்திறனாளிகள் வேலை பார்க்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மாற்றுத்திறனாளிகளுக்கு பாதகம் விளைவிக்கும் மத்திய அரசின் உத்தரவினை  திருப்பிப் பெற வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

Categories

Tech |