இந்திய கடற்படையிடம் நவீன கடல்சார் ஹெலிகாப்டர்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்திய கடற்படை இரண்டு நவீன கடல்சார் ஹெலிகாப்டர்களை நாட்டின் போர் திறனை வலுப்படுத்தும் வகையில் அமெரிக்காவிடமிருந்து பெற்றுள்ளது. மத்திய அரசு இந்திய பாதுகாப்பு படையை வலுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் இரண்டு நவீன கடல்சார் ஹெலிகாப்டர்களை நாட்டின் பலத்தை வலுப்படுத்தும் விதமாக இந்திய கடற்படை அமெரிக்காவிடமிருந்து பெற்றுள்ளது. மேலும் இந்திய அதிகாரிகளிடம் எம்எச்-60-ஆர் ஹெலிகாப்டர்கள் நேற்று அமெரிக்காவில் உள்ள கடற்படை விமான தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
லாக்ஹீட் மார்ட்டின் கார்ப்பரேஷன் நிறுவனம் எம்எச்-60-ஆர் ஹெலிகாப்டர்களை தயார் செய்துள்ளது. அமெரிக்காவிடமிருந்து இந்தியா 24 எம்எச்-60-ஆர் ஹெலிகாப்டர்களை வெளிநாட்டு இராணுவ விற்பனை விதிகளின்படி வாங்கவுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் “ஹெலிகாப்டர்களை அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கும் நிகழ்ச்சியில் அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரஞ்சித் சிங் சந்து அந்த ஹெலிகாப்டர்களை பெற்றுக் கொண்டார்” இன்று இந்திய கடற்படையின் செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.