Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

டாக்டர் வீட்டில் கைவரிசை….. மிளகாய் பொடி தூவி 50 சவரன் நகை…. ரூ3,00,000 பணம் கொள்ளை…. குழப்பத்தில் போலீசார்….!!

வேலூர் காட்பாடியில் மருத்துவர் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் பணம் திருடப்பட்டது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

வேலூர் மாவட்டம்  காட்பாடி பகுதியை அடுத்த  பாலாஜி நகரில் வசித்து வரும் ராமனைய்யா குடியாத்தம் சாலையில் சாந்தி கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வருகிறார். ஞாயிற்றுக்கிழமை மாலை குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு இரவு வீடு திரும்பிய போது முன்பக்க கதவு மற்றும் பீரோ  பூட்டு உடைக்கப்பட்டு அதில் இருந்த 50 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாய் பணம் ஆகியவை திருடப்பட்டது தெரியவந்தது. மேலும் திருடர்கள் மிளகாய் பொடியை தூவி சென்றதால் காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |