ஹாங்காங் அரசு கொரோனா பரவல் காரணமாக வெள்ளெலிகளை கொல்ல உத்தரவிட்டிருக்கிறது.
செல்லப்பிராணிகளை விற்கும் ஒரு கடையில் 11 வெள்ளெலிகளுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. எனவே அரசு, வளர்ப்பு பிராணிகள் விற்கும் கடைகளில் இருக்கும் வெள்ளெலிகள் அனைத்தையும் கொல்ல உத்தரவிட்டது. மேலும், கடந்த மாதம் 22ஆம் தேதிக்கு பிறகு வெள்ளெலிகளை வாங்கிய உரிமையாளர்கள் விலங்கு நல மையங்களில் அவற்றை ஒப்படைத்து விடுமாறு அறிவிக்கப்பட்டது.
அங்கு அவற்றை கொன்று விட தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனவே, அங்கு உரிமையாளர்களிடமிருந்து விலங்கு நல ஆர்வலர்கள் அவற்றை வாங்கிச்சென்றிருக்கிறார்கள். மேலும், கொரோனா தொற்றில் விலங்குகளுக்கு பங்கு இருக்கிறது என்பதற்கு எந்த ஆதாரங்களும் இல்லை என்று விஞ்ஞானிகள் கூறியிருக்கிறார்கள்.