நிர்பயா வழக்கு குற்றவாளிகளுக்கு தூக்கு தேதியை மாற்றி அறிவிக்க கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2012-ஆம் ஆண்டு தலைநகர் டெல்லியில் ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். இந்த கொடூர சம்பவம் நாடுமுழுவதும் அதிர்ச்சியை உள்ளாக்கியது. இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 4 பேருக்கு இன்று தூக்கு தண்டனை விதிக்கப்பட்டு இருந்த நிலையில் மறு உத்தரவு வரும் வரை மரண தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் நிர்பயா குற்றவாளிகள் 4 பேரையும் தூக்கிலிட புதிய தேதியை அறிவிக்க கோரி திகார் சிறை நிர்வாகம் புதிய மனு டெல்லியில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. மேலும் அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும், 4 பேரையும் வெவ்வேறு தேதிகளில் தனித்தனியாக தூக்கிலிட உத்தரவிட வேண்டுமென்றும், 4 குற்றவாளிகளையும் ஒன்றாக தூக்கிலிட வேண்டும் என்ற விதி ஏதும் இல்லை என்று திகார் சிறை நிர்வாகம் அந்த மனுவில் கூறப்பட்டு இருக்கின்றது.
குற்றவாளி வினய்ஷர்மாவின் கருணை மனுவை குடியரசு தலைவர் நிராகரித்ததால் புதிய தேதி அறிவிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு மீதான விசாரணை நடைபெற்று வருகின்றது.