தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஹன்சிகா மோத்வானி. யு.ஆர். ஜமீல் இயக்கத்தில் இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் மஹா. ஹன்சிகாவின் 5௦வது படமாக உருவாகி உள்ள இப்படத்தில் Etcetera Entertainment நிறுவனம் தயாரித்து சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இதனை தொடர்ந்து சமீபத்தில் மஹா திரைப்படத்தின் போஸ்டர் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மஹா திரைப்படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வெளியீட்டிற்குத் தயாராக உள்ள நிலையில் பல சிக்கல் நிலவி வருகிறது.
இந்த நிலையில் ஹன்சிகாவிடம் உங்களின் 50வது படம் தாமதமாவது உங்களுக்கு கஷ்டமாக இருக்கிறதா என்று கேள்வி கேட்டுள்ளனர். இதற்கு பதிலளித்த ஹன்சிகா “ஆம் வருத்தமாக இருக்கிறது என்று சொல்ல மாட்டேன் தாமதமாவது ஏமாற்றம் என்று தான் சொல்லுவேன். இது என்னுடைய 50வது படம் என்பதால் நம்பிக்கையுடன் இருக்கிறேன். இந்த நிலையில் இன்று என்னுடைய 55-வது படத்தின் படப்பிடிப்பு விழாவில் இருக்கிறேன் இருந்தாலும் பரவாயில்லை. ஒவ்வொரு திரைப்படத்திற்கும் அதன் விதி உள்ளது. அதேபோல் மஹா திரைப்படத்திற்கும் அதன் விதி இருக்கிறது. மஹா படத்தின் வெளியீட்டை ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறேன். படத்தின் ஸ்கிரிப்ட் பிரமாதமாகவும், நன்றாகவும் இருக்கிறது விரைவில் அனைத்தும் சீராகி எல்லாமே படத்திற்கு சாதகமாக அமையும் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்