இயக்குனர் ஜமில் சினிமாவில் அர்ப்பணிப்புக்கு உதாரணம் இவர் தான் என ஹன்சிகாவை புகழ்ந்து கூறியுள்ளார்.
யூ. ஆர். ஜமீல் இயக்கத்தில், மதியழகன் தயாரிப்பில் நடிகை ஹன்சிகா கதாநாயகியாக நடிக்கும் திரைப்படம் “மஹா”. இப்படத்தில் நடிகர் சிம்பு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படக்குழுவினர் ஹன்சிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு இப்படத்தின் ‘போஸ்டர்’ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இந்த போஸ்டர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பையும், படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. நடிகை ஹன்சிகா குறித்து இயக்குனர் ஜமீல் கூறுகையில்” சினிமாவில் அர்ப்பணிப்புக்கு உதாரணம் என்றால் அது நடிகை ஹன்சிகா தான். அதேபோல நேரத்தை மதிக்க கூடியவர் என்றாலும் அவர்தான்” என கூறியுள்ளார்.