அமெரிக்காவில் முதல் முறையாக 25 அடி உயரத்தில் இந்து கடவுளான அனுமான் சிலை நிறுவப்பட்டுள்ளது
அமெரிக்காவில் ஹொக்கசின் டெலாவேர் என்கிற இடத்தில் டெலாவேர் இந்து கோவில் சங்கம் சார்பாக வீரத்தில் இணையில்லா ஹனுமான் கடவுளுக்கு புதிய சிலை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. தெலுங்கானாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த சிலையின் சிறப்பம்சம் 70,000 பவுண்ட் எடையில்அமைந்தது இந்த சிலை.
25 அடி உயரம் கொண்ட இச்சிலையானது ஒரே கல்லால் செய்யப்பட்டது ஆகும். அமெரிக்க நாட்டில் ஏராளமான இந்து கோவில்களும், சிலைகளும் இருக்க பெற்றாலும் தற்போது நிறுவப்பட்டிருக்கும் ஹனுமான் சிலையே அனைத்தையும் விட மிகப் பெரியதாகும். இது அமெரிக்கா வாழ் இந்துக்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இத்தகவலை டெலாவேர் இந்து கோவில் சங்கத்தின் தலைவர் பதிபண்டா ஷர்மா தெரிவித்துள்ளார்.