Categories
சினிமா தமிழ் சினிமா

மகிழ்ச்சி.. திருமண நாளில் குஷ்பு எடுத்த செல்ஃபி… வைரலாகும் புகைப்படங்கள்!

நடிகை குஷ்பு இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த காலத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவரில் நடிகை குஷ்புவும் ஒருவர். தனது நடிப்பினால் ரசிகர்களை மிகவும் கவர்ந்த இவரை தமிழ் சினிமாவில் யாராலும் இன்று வரையிலும் மறக்க முடியாது. குறிப்பாக 90களில் குஷ்பூ நடித்த சின்ன தம்பி, அண்ணாமலை, போன்ற படங்கள் அவ்வளவு எளிதில் யாராலும் மறக்க முடியாது.

இன்றளவும்  இவர் நடித்த பல படங்கள் பேசப்படுகின்றது. தற்போது 28 ஆண்டுகளுக்கு பின் ரஜினியுடன் அண்ணாத்த என்ற படத்தில் குஷ்பு நடித்து வருகின்றார். அதேசமயம் குஷ்பு  அரசியலில் களமிறங்கி பணியை தொடர்ந்து வருகின்றார். குஷ்புவின் 2 மகள்களில் ஒரு மகள் சிறு வயது தொழிலதிபராக இருக்கின்றார்.

அதே போல் குஷ்புவின் கணவர் சுந்தர் சி இயக்குனராகவும், நடிகராகவும் தனது பணியை சிறப்பாக செய்து வருகிறார். இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு குஷ்பு தங்கள் 25-ஆவது திருமணநாளை கணவருடன் சிறப்பாக கொண்டாடினார். அப்போது சேலையில் மங்களகரமாக செல்பி ஒன்றை எடுத்தார். அந்த புகைப்படம் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் அழகாக இருக்குறீர்கள் என்று குஷ்புவை பாராட்டி வருகின்றனர்.

https://www.instagram.com/p/B8_47WAgnnl/?utm_source=ig_web_button_share_sheet

https://www.instagram.com/p/B8ax7AOgIvq/?utm_source=ig_web_button_share_sheet

Categories

Tech |