மண்டல அளவிலான தேசிய வங்கி தேர்வுகளை மாநில மொழிகளில் எழுதிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்டல அளவிலான தேசிய வங்கிகளுக்கு உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வை RRB அமைப்பு தான் நடத்துகின்றனது. பொதுவாக IBPS நடத்தும் தேர்வை போல வினாத்தாள்கள் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில் வடிவமைத்து இது வரை நடத்திவரபட்ட மண்டல ஊரக வங்கித் தேர்வுகளை இனிமேல் அந்தந்த மாநில மொழிகளிலும் எழுதிக் கொள்ளலாம் என்று RRB அறிவித்துள்ளது.
இதனால் இனி இந்த தேர்வு வினாக்கள் அந்தந்த மாநில மொழிகளிலும்இடம்பெறும். மேலும் மேலும் இதற்கான முழுமையான அறிவிப்பு வரும் 16ம் தேதி வெளியாகும் என தெரிகின்றது. அதில் எவ்வளவு பணியிடங்கள் குறித்த முழு விவர அறிவிப்பு வெளியாகும் என்று சொல்லப்படுகின்றது. ஆங்கிலம், இந்தியில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த தேர்வு முதல்முறையாக மாநில மொழிகளில் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.