Categories
டெக்னாலஜி தேசிய செய்திகள்

“WHATSAPP PAY” அதிவேகம்….. அதிரடி சலுகை…… புதிய அப்டேட்டால் வாடிக்கையாளர்கள் குஷி….!!

பணப்பரிவர்த்தனைக்கான அப்டேட்களை இந்த மாத இறுதியில் வெளியிடப்போவதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் நிறுவனம் தனக்குப் போட்டியாக வரக் கூடிய செயலிகளை ஒன்று விலைக்கு வாங்கி தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும். அப்படி இல்லை எனில் அதற்கு போட்டியாக தனது செயலி மூலமே புதிய அப்டேட்களை விட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருவது வழக்கமாக கொண்டுள்ளது.  ஓரிரு வருடங்களுக்கு முன்பு வாட்ஸ்அப் செயலி உலகில் அதிக நபர்களால் பதிவிறக்கம் செய்யப்பட்டதன் காரணமாக, அதனை பேஸ்புக் நிறுவனம் விலைக்கு வாங்கியது.

இந்த வாட்ஸ் அப் செயலி மூலம் பல்வேறு அப்டேட்களை தொடர்ந்து வழங்கி வாடிக்கையாளர்களை குஷிப்படுத்தி வருகிறது. அந்த வகையில், தற்போது அனைவரும் பயன்படுத்தும் google pay போன்பே உள்ளிட்ட பணப்பரிவர்த்தனை செயலிகளை கணக்கில் வைத்துக்கொண்டு, வாட்ஸ்அப் மூலம் பண பரிவர்த்தனை செய்யும் முயற்சியில் அந்நிறுவனம் களமிறங்கியுள்ளது.

இதற்கான அப்டேட் தற்போது வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில்,  வாட்ஸ் அப்பின் யுபிஐ வசதி முதன்முதலில் ஐசிஐசிஐ பேங்க் உடன் இணைந்து செயல்பட இருக்கிறது. மேலும் இதில் மற்ற பணபரிவர்த்தனை செயலிகளை விட அதிவேக சேவைகளையும், அதிக சலுகைகள் வழங்கப் போவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த செய்தி வாட்ஸ்அப் உபயோகிக்கும் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |