2020-ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 9 நாட்கள் விடுமுறை விடுவதற்கான வாய்ப்புள்ளதால் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
பள்ளி மற்றும் கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் ஆண்டு தோறும் உற்சாகமாக்க எதிர்பார்த்துக் காத்து இருப்பது தமிழர் திருநாளான பொங்கல் திருநாள். இது தமிழகம் முழுவதும் உள்ள தமிழர்களால் உற்சாகமாக கொண்டாடுவது ஒரு புறமிருந்தாலும் , மறுபுறம் இதற்க்கு வரும் விடுமுறை அதிகம். பொங்கல் , மாட்டு பொங்கல் , காணும் பொங்கல் என தொடர்ந்து அரசு விடுமுறை நாளாக அனுசரிக்க படுகின்ற பொங்கலுக்கு முந்தைய நாள் போகி பண்டிகையும் அரசு விடுமுறையாக கொண்டாடப்படுகின்றது.
ஆண்டு தொடரும் பொங்கல் வந்து விட்டால் 4 நாட்கள் விடுமுறை கிடைக்கும் என்பதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் எதிர்பார்த்துக் காத்திருப்பார்கள்.இந்நிலையில் வருகின்ற 2020_ஆம் ஆண்டு பொங்கலுக்கு 9 நாட்கள் விடுமுறைக்கான வாய்ப்பு இருப்பதால் மாணவர்கள் எதிர்பார்த்து கத்துக்க கொண்டு இருக்கின்றனர். அந்த வகையில்
11-01-20 சனி -விடுமுறை
12-01-20 ஞாயிறு -விடுமுறை
13-01-20 திங்கள் -வேலைநாள்
14-01-20 செவ்வாய் -போகி விடுமுறை
15-01-20 புதன் -பொங்கல்
16-01-20 வியாழன் -மாட்டு பொங்கல்
17-01-20 வெள்ளி -காணும் பொங்கல்
18-01-20 சனி -விடுமுறை
19-01-20 ஞாயிறு -விடுமுறை
இதில் போகி , பொங்கல் , மாட்டு பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என அடுத்தடுத்து செவ்வாய், புதன் , வியாழன் மற்றும் வெள்ளி வருகின்றது. இந்த வாரத்தில் சனி , ஞாயிறு வழக்கான விடுமுறை என்பதால் அந்த வகையில் 4 நாட்களும் , போகி பண்டிகைக்கு முன்பு திங்கள்கிழமை ஒரே ஒரு நாள் என்பதால் அதையும் சேர்த்து விடுமுறை விடுவதற்கு வாய்ப்புள்ளதாக மாணவர்கள் கருதுகின்றனர்.