தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகர் ரஜினிகாந்த். இவர் நடிப்பில் வெளியாகும் படங்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இன்று தன்னுடைய 73 ஆவது பிறந்தநாளை கொண்டாடும் இவருக்கு அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் பிரபல கேரள நடிகரான மம்முட்டி இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், இ”னிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா. எப்போதும் மகிழ்ச்சியாகவும் ஆரோக்கியமாகவும் இருங்கள்” என பதிவிட்டுள்ளார். இவரும் நடிகர் ரஜினியும் கடந்த 1991 ஆம் ஆண்டு ரிலீசான ‘தளபதி’ படத்தில் ஒன்றாக இணைந்து நடித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.