இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி நேற்று தனது 31ஆவது பிறந்தநாளைக் கொண்டாடினார். இவருக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள், இந்திய அணி வீரர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்தனர்.
அதில் இந்திய அணியின் இளம் வீரர் ரிஷப் பண்ட் தனக்கே உரித்தான குறும்பு தனத்துடன் கோலிக்கு வாழ்த்துகளை தெரிவித்தார். அந்த வாழ்த்தில், “Happy Birthday chachaa” எனப் பதிவிட்டார். இந்தியில் ”சாச்சா” என்றால் ”அங்கிள்” என்று அர்த்தமாகும். இந்தப் பதிவு மூலம் கோலி 30 வயதைக் கடந்துவிட்டார் என்பதைக் ரிஷப் பந்த் குறிப்பிடுகிறார் என ரசிகர்கள் பின்னூட்டமிட்டு வருகின்றனர்.
Happy birthday chachaaa😬😬 @imVkohli always keep smiling 🎂 pic.twitter.com/i4s69d2ixS
— Rishabh Pant (@RishabhPant17) November 5, 2019