நடிகர் சூர்யாவின் மனைவியும் , தமிழ் நடிகையுமான ஜோதிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
நடிகை ஜோதிகா தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் , இந்தி என்று பல மொழி படங்களில் நடித்திருக்கிறார். ஜோதிகாவின் நிஜப்பெயர் நிஜப்பெயர் ஜோதிக சாதனா. ஜோதிகா மும்பையில பிறந்தாங்க. இவங்களுக்கு நக்மா , ரோஷினி என்ற இரண்டு சகோதரிகளும் , சுராஜ் என்று ஒரு சகோதரரும் இருக்கிறார். ஜோதிகா முதல் முறையாக இந்தி படத்தில் அறிமுகமானார். தமிழில் வாலி படத்திலும் , தெலுங்கு மொழியில் சிரஞ்சீவி கூட தாகூர் படத்தில் நடித்துள்ளார்.
பின்னர் நடிகர் சூர்யா கூட ”பூவெல்லாம் கேட்டுப்பார்” படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தார். பின்னர் S.J சூர்யா இயக்கத்தில் விஜய் நடித்த குஷி படம் தான் இவங்க சினிமா பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது. இந்த படத்துக்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் அவார்ட் ஜோதிகாவுக்கு வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து விஜய் நடித்த பிரண்ட்ஸ் படத்துக்கு ஒப்பந்தமான ஜோதிகா பின்னர் அந்த படத்தில் இருந்து விலகிக் கொண்டார். என்ன காரணத்துக்காக அவர் விளக்கினார் என்று தெரியல , பின்னர் ஜோதிகாவுக்கு பதிலாக தேவயானி நடித்தார்.
இந்தப் படத்தை தொடர்ந்து முகவரி , டும் டும் டும் , சினேகிதியே என தொடர்ந்து நடித்த படங்கள் ஜோதிகாவுக்கு வெற்றிப் படங்களாக அமைந்தது. 2003 ல விக்ரம் கூட தூள் , சூர்யாவோட காக்க காக்க , விஜய்யோட திருமலை அப்படினு அடுத்தடுத்து இவுங்க நடிச்ச எல்லா படமுமே சூப்பர் டூப்பர் ஹிட்டாகியது. இதைத்தொடர்ந்து சூர்யாவோட பேரழகன் படத்தில் முதன்முதலாக இரட்டை வேடத்தில் நடித்தார் ஜோதிகா. இந்தப் படத்துக்காக தமிழ்நாட்டின் ஸ்டேட் பிலிம்பேர் அவார்ட் ஜோதிகாவுக்கு வழங்கப்பட்டது. இதையடுத்து 2005ல ஜோதிகா நடித்த சந்திரமுகி படம் இவருக்கு மிகப்பெரிய ஹிட் படமாக அமைந்தது.
பின்னர் 2006 சிம்பு கூட சரவணா படத்தில் நடித்த ஜோதிகா தொடர்ந்து இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெளியான திரில்லர் படமான ”வேட்டையாடு விளையாடு” படத்தில் கமலஹாசனுக்கு ஜோடியாக நடித்தார். 2007ல் வெளியான பச்சைக்கிளி முத்துச்சரம் , மொழி ஆகிய இரண்டு படங்களுமே ஜோதிகாவுக்கு பாராட்டை பெற்றுக் கொடுத்தது. ஜோதிகா 7 படங்கள் சேர்ந்து நடித்த நடிகர் சூர்யாயை கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க . 7 படங்களில் ஒன்றாக நடித்த இவர்கள் இருவீட்டார் சம்மதத்தோடு கல்யாணம் பண்ணிக்கிட்டாங்க. இவர்களுக்கு தியா , தேவ் என்று இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள்.
திருமணத்துக்கு பிறகு நடிப்பை நிறுத்திய ஜோதிகா நீண்ட இடைவெளிக்குப் பிறகு 36 வயதினிலே படம் மூலம் சினிமாவுக்கு ரீஎன்ட்ரி ஆனார். இந்தப் படத்துக்கான பெஸ்ட் ஆக்டர் பிலிம் பேர் அவார்டு வாங்கினார்கள். இதே படத்துக்கு பிகைண்ட்வுட் வழங்கிய சிறந்த நடிகைக்கான கோல்டு மெடலும் வாங்கி இருக்காங்க. இதைத்தொடர்ந்து பிரம்மா இயக்கிய பெண்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் மகளிர் மட்டும் இதில் ஜோதிகா நடித்து இருந்தார்.
இந்த படத்தை நடிகர் சூர்யா தயாரித்து இருந்தார். இதைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்த மெர்சல் படத்தில் நடிக்க ஒப்பந்தமான ஜோதிகா இந்த படத்தில் இருந்து விலகினார். ஜோதிகாவுக்கு பதிலாக நித்யா மேனன் நடித்தார். அதற்க்கு பிறகு இயக்குனர் பாலா இயக்கிய நாச்சியார் படத்தில் நடித்தார் ஜோதிகா. இந்த படத்தில் டீஸர் வெளியாகிய போதே சர்ச்சைகள் எழுந்தத்த்து. இதை தொடர்ந்து செக்கச்சிவந்தவானம் , காற்றின் மொழி என்று நல்ல படங்களை கொடுத்துள்ளார் சூர்யா. இன்று ( 18 .அக்டோபர் ) பிறந்தநாள் காணும் ஜோதிகாவுக்கு வாழ்த்துக்கள்.