Categories
சினிமா தமிழ் சினிமா பல்சுவை

#Happy Birthday Jo : இப்படி ஒரு காதலி ….. இப்படி ஒரு மனைவி …. இப்படி ஒரு வாழ்க்கை கிடைக்குமா ? நமக்கு …!!

காதலிப்பவர்கள் அனைவரும் எப்படி வாழவேண்டும் என்பதற்கு முன்னுதாரமானக் வாழ்ந்து வருபவர்கள் சூர்யா , ஜோதிகா தம்பதிகள்.

உலகில் பல நடிகர் , நடிகைகள் காதலித்து திருமணம் செய்து கொள்கிறார்கள். ஆனால் அதில் வெகு சிலர் மட்டுமே சிறந்த ஜோடியாக எடுத்துக்காட்டாக திருமண வாழ்க்கையை வாழ்ந்து காண்பித்துள்ளனர். அதில் குறிப்பிடத்தக்க ஜோடி சூர்யா , ஜோதிகா ஜோடி. ரசிகர்கள் பலருக்கு இவர்கள் போல காதலித்து திருமணம் செய்து மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கும்.  அந்த அளவிற்கு சூர்யா , ஜோதிகா ஜோடி வாழந்து வருகின்றனர். ஜோதிகா வளர்ந்தது எல்லாம் மும்பையில் தான். இவருக்கு தமிழ் சுத்தமாக தெரியாது , ஒரு வார்த்தை கூட உச்சரிக்க தெரியாமல் இருந்த ஜோதிகாவிற்கு ஆரம்ப காலத்தில் தமிழ் கொஞ்சம் கொஞ்சம் கற்பித்தது சூர்யாதான். பிறகு திருமணத்திற்கு பிறகு மாமியாரிடம் முழுமையாக தமிழ் கற்றுக்கொண்ட ஜோதிகா இப்போது தமிழ்நாட்டில் பிறந்து வளர்ந்தவர் போல தமிழ் சரளமாக பேசுகிறார்.

சூர்யா தொடர் தோல்வியால் துவண்டு இருந்த காலகட்டத்தில் கௌதம் மேனன் காக்க காக்க திரைக்கதை அமைத்து கொண்டிருந்தார். அப்போது ஜோதிகாதான் நடிகை என்று தீர்மானமாகி இருந்தத்த்து. பின்னர் ஜோ பரிந்துரைத்ததால் தான் அந்த படத்தில் நடிக்கும் வாய்ப்பு சூர்யாவுக்கு சென்றது.அந்த படமும் சூப்பர் ஹிட்டானது , காக்க காக்க சூர்யாவின் திரை பாதையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. சூர்யா-ஜோதிகா பல படங்களில் ஒன்றாக சேர்ந்து நடித்துள்ளனர். ஒரு சூட்டிங்கில் இருக்கும்போது சூர்யா தொடர் தோல்வி கண்டுள்ளார் என்று ஜோதிகாவுக்கு  தெரியவந்தது. சூட்டிங்கின் அருகில் உள்ள YMCA மைதானத்தில் சூர்யா பயிற்சி செய்து கொண்டிருக்கிறார் என தெரியவர தனது அசிஸ்டன்ட் அனுப்பி சூர்யாவிடம் பேச வேண்டும் என கேட்டு வர கூறியுள்ளார் ஜோதிகா.

பின்னர் பேசுவதற்கு சூர்யா மறுக்கவே உடனடியாக ஜோதிகாவே நேரடியாக சென்று அவருடன் பேசி தொடர்பு எண் வாங்கி திரும்பினார். இதற்கு பிறகுதான் இவர்கள் மத்தியில் காதல் மலர்ந்தது. ஜோதிகாவின் ராசி கல்லானது ஓபல் எனப்படும் ஒருவகையான மாணிக்கக்கல். திருமணம் முடிந்து சூர்யா-ஜோதிகா இத்தாலி , வெனிஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது அவர்கள் அந்த மாணிக்கக் கல்லை பார்த்தனர் , ஆனால் வாங்கவில்லை. ஊர் திரும்பிய பிறகு அதே போன்ற மாணிக்க கல்லை வாங்கி சூர்யா ஜோ_வுக்கு  பரிசளித்து ஆச்சரியப்படுத்தினார். சூர்யா ரத்த சரித்திரம் படத்தில் முதலில் இந்தி தெரியாது என நடிக்க மறுத்தார். பிறகு தான் சூர்யாவிற்கு குறுகிய காலத்தில் ஹிந்தி கற்பித்து அவரை சரளமாக ஹிந்தியில் பேச வைத்தார்.இந்த காலத்தில் ஒரு ஹிந்தி வாத்தியாரு சூர்யாவிற்கு இந்தி கற்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

சூர்யாவிற்கும் , ஜோதிகாவுக்கு தியா , தேவ் என  2 குழந்தைகள் உள்ளன.  இதில் தேவ் வளர்ப்பு  ஜோதிகாவின் கடமை என்றும் , தியாவை வளர்ப்பது சூர்யாவின் கடமை என்றும் இருவரும் ஒரு கோட்பாடு வைத்துள்ளனர். குழந்தைகள் பிறந்த பிறகு ஜோ நடிக்க மறுத்த காரணம் சிறந்த நடிகையாக இருப்பதைக் காட்டிலும் , சிறந்ததாக தாயாக இருக்க வேண்டும் என அவர் விரும்பியது தான். திருமணத்திற்கு பிறகு தனி குடுத்தனம் செல்வதாக முன் திட்டம் இருந்துள்ளது. ஆனால் திருமணத்திற்குப் பிறகு எல்லோரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக தான் இருக்க வேண்டும் என ஜோ விரும்பியுள்ளார். எல்லோருக்கும் ஏதாவது ஒரு உணவு , பாணத்தின் மீது அதிக பிரியம் இருக்கும். ஜோ_வுக்கு காப்பி டே மீது அதிக விருப்பம். ஸ்ட்ராங் காபி குடிப்பது என்றால் ஜோ_வுக்கு அதிகம் பிடிக்குமாம்.

ஜோதிகாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் : 

Categories

Tech |