அக்டோபர் 18_ஆம் தேதி பிறந்தநாள் காணும் ஜோதிகா தமிழில் 32 படங்களை நடித்துள்ளார்.
நடிகை ஜோதிகா இவர் 1978_ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 18_ஆம் தேதி ஷாமா காஜி மற்றும் சந்தர் சாதனா தம்பதிக்கு மகளாக பிறந்தார். இவரின் இயற்பெயர் ஜோதிகா இவருக்கு நக்மா , ரோஷினி என்ற இரண்டு சகோதரிகளும் , சுராஜ் என்று ஒரு சகோதரரும் இருக்கிறார். நடிகை ஜோதிகா தமிழ், தெலுங்கு, இந்தி மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் நடிகரான சூர்யாவை காதலித்து 2006_ஆம் ஆண்டு செப்டம்பர் 11_ஆம் தேதி திருமணம் இருவீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டு மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றனர். இவர்களுக்கு தியா என்ற பெண் குழந்தையும் , தேவ் என்ற ஆண் குழந்தையும் உள்ளனர்.
நடிகை ஜோதிகா நடித்த படங்கள் :
1999_ஆம் ஆண்டில் வாலி என்ற தமிழ் படத்தில் அறிமுகமான ஜோதிகா 2018_ஆம் ஆண்டு வரை 32 படங்களில் நடித்துள்ளார். நடிகர் சூர்யாவுடன் மட்டும் 7 படத்தில் ஜோதிகா நடித்துள்ளார். இதில் 1999_ஆம் ஆண்டு வெளியான வாலி படத்தில் இவர் நடித்ததற்கு சிறந்த அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதும் , 2004_ஆம் ஆண்டில் வெளியான பேரழகன் படத்திற்கு சிறந்த நடிக்கைக்கான பிலிம்பேர் விருது பெற்றார்.
2018 – காற்றின் மொழி
2015 – 36 வயதினிலே
2007 – மொழி
2006 – வேட்டையாடு விளையாடு
2006 – சில்லுனு ஒரு காதல்
2006 – சரவணா
2005 – ஜூன் ஆர்
2005 – மாயாவி
2005 – சந்திரமுகி
2004 – அருள்
2004 – பேரழகன்
2004 – மன்மதன்
2003 – திருமலை
2003 – த்ரீ ரோசஸ்
2003 – காக்க காக்க
2003 – தூள்
2003 – பிரியமான தோழி
2002 – ராஜா
2002 – லிட்டில் ஜான்
2002- 123
2001 – பூவெல்லாம் உன் வாசம்[2]
2001 – டும் டும் டும்
2001 – 12 பி
2001 – ஸ்டார்
2001 – தெனாலி
2000 – குஷி
2000 – ரிதம்
2000 – உயிரிலே கலந்தது
2000 – முகவரி
2000 – சிநேகிதியே
2000 – பூவெல்லாம் கேட்டுப்பார்
1999 – வாலி