Categories
சினிமா தமிழ் சினிமா

“எப்பவுமே அவர்தான் தலைவர்”….. பழசை மறந்து EX. மாமனாருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன தனுஷ்…. வைரல் ட்வீட்…!!!!!

தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக முன்னணி கதாநாயகராக வலம் வரும் நடிகர் ரஜினிகாந்தை ரசிகர்கள் அன்போடு சூப்பர் ஸ்டார் என்று அழைக்கிறார்கள். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெய்லர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தன்னுடைய 72-வது பிறந்தநாள் கொண்டாடி வருகிறார். இவருடைய பிறந்தநாளுக்கு முதல்வர் ஸ்டாலின், உலகநாயகன் கமல்ஹாசன் உட்பட பல பிரபலங்களும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அந்த வகையில் நடிகர் ரஜினிகாந்தின் முன்னாள் மருமகனான தனுஷ் தற்போது  ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நடிகர் தனுஷ் தன்னுடைய twitter பக்கத்தில் ஹேப்பி பர்த்டே தலைவா என்று பதிவிட்டுள்ளார். நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விவாகரத்து செய்து கொண்ட நிலையில், இந்த ஜோடிக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரு மகன்கள் இருக்கிறார்கள். மேலும் ரஜினியின் மகளை தனுஷ் விவாகரத்து செய்து இருந்தாலும் தற்போது அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்லி தான் எப்போதும் ரஜினியின் ரசிகர் என்பதை தனுஷ் நிரூபித்துள்ளார்.

Categories

Tech |