Categories
சினிமா தமிழ் சினிமா

ரசிகர்களின் கனவுக்கன்னி திரிஷாவிற்கு பிறந்தநாள்…. சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாழ்த்து…!!!

முன்னணி நடிகை திரிஷா தனது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘மௌனம் பேசியதே’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் திரிஷா. இதைத்தொடர்ந்து விஜய், அஜித், ரஜினி, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள திரிஷா தற்போது ரசிகர்கள் மத்தியில் கனவு கன்னியாக வலம் வருகிறார்.

இந்நிலையில் நடிகை திரிஷா இன்று தனது 38வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதை தொடர்ந்து ரசிகர்களும், திரை பிரபலங்களும் திரிஷாவிற்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பிரபல சன் பிக்சர்ஸ் நிறுவனம் திரிஷாவிற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளது.

 

 

Categories

Tech |