Categories
கிரிக்கெட் விளையாட்டு

விக்கெட் கீப்பிங்கின் ‘கில்லி’க்கு பிறந்தநாள்….!!

பேட்டிங்கில் சச்சினைப் போல விக்கெட் கீப்பிங்கில் பலருக்கு ரோல்மாடலாக திகழ்ந்தவர் கில்கிறிஸ்ட். அவர் ஏற்படுத்திய தாக்கத்தில் இன்றும் கிரிக்கெட்டில் சாதிக்க விரும்பும் விக்கெட் கீப்பர்கள் பயணித்துவருகின்றனர்.தற்போதைய இளம் விக்கெட் கீப்பர்கள் பெரும்பாலோனருக்கு இன்ஸ்பிரேசனாக திகழும் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் கில்கிறிஸ்ட் தனது 48ஆவது பிறந்தநாளை நேற்று கொண்டாடினார்.

கிரிக்கெட்டில் விக்கெட் கீப்பரும் ஒருவகையில் ஆல்ரவுண்டர்கள்தான். ஆனால் இது ஒரு காலக்கட்டதில் ஏற்றுகொள்ளப்படாமல் இருந்தது. அதற்கு முக்கிய காரணம் அப்போது இருந்த பெரும்பலான விக்கெட் கீப்பர்களின் பங்களிப்பு, விக்கெட் கீப்பிங்கைத் தாண்டி பேட்டிங் பெர்ஃபாமேன்ஸ் ஆவரேஜாகவே இருந்தது.

Gilchirist

ஆனால், ஆஸ்திரேலிய ஜாம்பவான் கில்கிறிஸ்டின் என்ட்ரிக்குப் பிறகு விக்கெட் கீப்பர் என்ற ரோலுக்கு புதிய டைமென்ஷன் கிடைத்து. அதுவரை விக்கெட் கீப்பர்களால் பேட்டிங்கில் அணிக்கு ரன்கள் அடித்துத் தர முடியாது என்ற சூழலை முற்றிலும் மாற்றியவர் கில்கிறிஸ்ட். விக்கெட் கீப்பிங் மட்டுமின்றி, பேட்டிங்கிலும் அவரது கை வேகமாக செயல்பட்டதால் ஆஸ்திரேலிய அணியின் மேட்ச் வின்னராக திகழ்ந்தார்.

இவரைப் போன்ற ஒரு அக்ரஸிவ் பேட்ஸ்மேன் அப்போதைய ஆஸ்திரேலிய அணியில் (1996 முதல் 2008) அதுவரை இருந்ததே இல்லை. ஒருநாள் போட்டியில் தொடக்க வீரராக இவர் ஹேடனுடன் களமிறங்கினாலே எதிரணிக்கு ஒரு வித பயத்தை ஏற்படுத்தும்.

Gilchirist

அதுவும் இந்தியாவுக்கு எதிரான போட்டி என்றாலே, கில்கிறிஸ்ட் இன்னிக்கி சீக்கிரம் அவுட்டாகனும்னு வேண்டாத ஆட்களே இருக்க மாட்டார்கள். டெஸ்ட், ஒருநாள், டி20 என ஃபார்மெட் மாறினாலும் கில்கிறிஸ்ட்டின் அக்ரஸிவான பேட்டிங் ஸ்டைல் மாறாமல் இருக்கும். அக்ரஸிவ் பேட்டிங்தான் கில்கிறிஸ்ட்டின் ப்ளஸ். அதுவும் டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக்கொண்டிருந்தாலும், இவர் ஏழாவது வரிசையில் களமிறங்கி தனது பேட்டிங் மேஜிக்கால் சரிவிலிருந்த அணியை மீட்டெடுப்பார்.

Gilchirist

இதனால், கில்கிறிஸ்ட்டின் ஆட்டத்திறன் ஆஸ்திரேலிய அணிக்கு மட்டுமின்றி மற்ற அணிகளுக்கும் உதவியது. கில்கிறிஸ்ட்டால் மற்ற அணிகளில் இருந்த விக்கெட் கீப்பர்களும் தங்களது அணிக்காக ரன்களை அடித்து மேட்ச் வின்னராக செயல்படத் தொடங்கினர். பிரபல ஆங்கில கிரிக்கெட் வெப்சைட்டில் வெளியான புள்ளியியலில், டெஸ்ட் போட்டிகளில் கில்கிறிஸ்ட்டின் வருகைக்குப்பிறகு விக்கெட் கீப்பர்களின் பேட்டிங் ஆவரேஜ் 20இல் இருந்து, 30ஆக உயர்ந்தது. அதேபோலதான் ஒருநாள் போட்டிகளிலும் விக்கெட் கீப்பர்களின் பேட்டிங் ஆவரேஜ் ஸ்கேல் உயர்ந்தது.

இதனால் கில்கிறிஸ்டுக்கு முன், கில்கிறிஸ்டுக்கு பின் என்றுதான் விக்கெட் கீப்பர்களின் முன்னேற்றத்தை பிரித்து பார்க்க வேண்டும். விக்கெட் கீப்பர் என்றால் இப்படிதான் இருக்க வேண்டும் என்ற டெம்ப்ளேட்டை இவர் உருவாக்கியதால், மற்ற அணிகளும் கில்கிறிஸ்ட்டைப் போன்ற ஒரு க்ளோனிங்கைத் (மேட்ச் வின்னர்) தேட ஆரம்பித்தனர். தேடிக்கொண்டும் இருக்கின்றனர்.

Gilchirist

பேட்டிங்கில் சச்சினைப் போல விக்கெட் கீப்பிங்கில் பலருக்கு ரோல்மாடலாக திகழ்ந்தவர் கில்கிறிஸ்ட். அவர் ஏற்படுத்திய தாக்கத்தில் இன்றும் கிரிக்கெட்டில் சாதிக்க விரும்பும் விக்கெட் கீப்பர்கள் பயணித்துவருகின்றனர். அப்படி அவர் ஏற்படுத்திய தாக்கத்தால்தான், இந்திய அணிக்கு தோனி, நியூசிலாந்துக்கு மெக்கல்லம், இலங்கைக்கு சங்ககரா, தென் ஆப்பிரிக்காவுக்கு டி காக், இங்கிலாந்துக்கு பட்லர், பெயர்ஸ்டோவ் போன்று பலத் திறமையான விக்கெட் கீப்பர்கள் மேட்ச் வின்னர்களாக அந்தந்த அணிகளுக்குக் கிடைத்தனர். இன்னமும் கிடைப்பார்கள்…

Categories

Tech |