தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் ராம்சரண். இவர் பிரபல நடிகர் சிரஞ்சீவியின் மகன் ஆவார். அதன் பிறகு ராம் சரண் நடிப்பில் வெளியான ஆர்ஆர்ஆர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது சங்கர் இயக்கத்தில் ஆர்சி 15 என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதோடு நடிகர் ராம்சரண் 10 வருடங்களுக்கு பிறகு தந்தையாக போகும் மகிழ்ச்சி தகவலையும் அண்மையில் அறிவித்தார். இந்நிலையில் நடிகர் ராம்சரண் தன்னுடைய மனைவி உபாசனா கர்ப்பமாக இருப்பதை கொண்டாடும் விதமாக தன்னுடைய வீட்டில் கிறிஸ்துமஸ் பார்ட்டி ஒன்றினை ஏற்பாடு செய்துள்ளார்.
இந்த பார்ட்டியில் நடிகர் ராம் சரணின் குடும்பத்தினர் உட்பட திரையுலகில் அவருடைய நெருங்கிய உறவினர்களும் கலந்து கொண்டுள்ளனர். அதன்படி நடிகர் அல்லு அர்ஜுன், அவருடைய மனைவி சினேகா, அவருடைய சகோதரர் அல்லு சிரீஸ், இதே குடும்பத்தைச் சேர்ந்த நடிகர்கள் வருண் தேஜ், சாய் தரம் தேஜ் உட்பட பலர் கலந்து கொண்டுள்ளனர். மேலும் இது தொடர்பான புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.