மகிழ்ச்சியைக் கொடுக்கும் மன சோர்வை அகற்றும் உணவு பொருட்கள்
சாக்லேட்
சாக்லேட் என்றாலே சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக தான் இருக்கும். மகிழ்ச்சியை ஏற்படுத்தும் எண்டோர்பின் அமிலத்தை சுரக்க வைப்பதில் சாக்லேட்டிற்கு நிகர் இங்கு வேறு எதுவும் இல்லை.
காபி
காபி அருந்துவதால் மனதிற்கு புதிதாய் ஒரு புத்துணர்வு கிடைக்கும். காபியில் இருக்கும் கஃபின் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். சோர்வாக உணர்ந்தீர்கள் என்றால் ஒரு கப் காபி குடித்தால் போதும்.
தயிர்
தயிரில் சர்க்கரை கலந்து சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதோடு உங்களின் மூளையும் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகும். சாதம் சாப்பிடும் பொழுதும் தயிரை சேர்த்து சாப்பிடலாம்.
கிரீன் டீ
கிரீன் டீ உடலுக்கு நன்மை அளிப்பதோடு மனதிற்கும் புத்துணர்ச்சி அளிக்க உதவி புரிகின்றது. கிரீன் டீ குடிப்பதனால் உடல் அளவிலும் மனதளவிலும் ஆரோக்கியமாக இருக்க முடியும்.