இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான எஸ்பிஐ வங்கிக்கு நாடு முழுவதும் 44 கோடிக்கு மேற்பட்ட வாடிக்கையாளர்கள் உள்ளனர். வாடிக்கையாளர்களின் வசதிக்கு ஏற்ப பல புதிய சேவைகளை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்து வருகிறது. அதன்படி எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி இலவசமாகவே வருமான வரி தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இனி YONO ஆப்பில் உள்ள Tax2Win வசதி மூலம் இலவசமாக வருமான வரித் தாக்கல் செய்யலாம்.
வருமான வரித் தாக்கல் செய்ய தேவையான ஆணங்கள்:
1. பான் கார்டு
2. ஆதார் கார்டு
3. Form – 16
4. வரி கழிப்பு விவரங்கள்
5. வட்டி வருமானச் சான்றிதழ்கள்
6. வரி சேமிப்புக்கான முதலீட்டு ஆவணங்கள்