Categories
மாநில செய்திகள்

Happy News: இனி Correct ஆக வரும்…. பள்ளி ஆசிரியர்களுக்கு சம்பளம்…. வெளியான அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்ததையடுத்து பல்வேறு துறைகளிலும் பல மாற்றங்களை செய்து வருகிறது. குறிப்பாக பள்ளிக்கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களை புகுத்தி வருகிறது. அந்த வகையில் கடந்த மாதம் முக்கிய அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டனர். அது மட்டும் இன்றி நடுநிலை மற்றும் தொடக்க கல்வி என இரு நிலைகளுக்கும் தனித்தனியாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டார்கள். இந்த நிர்வாக மாற்றத்தினால் அதிகாரிகள் தலைமை பொறுப்பு ஏற்பதில் காலதாமதம் ஏற்பட்டது. இதன் எதிரொலியாக ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத ஊழியர்களுக்கு மாத சம்பளம் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

மாதந்தோறும் 29 ஆம் தேதிகளில் அனைத்து மாவட்டங்களிலும் பள்ளிகளில் ஊழியர்களின் சம்பள பட்டியல் தயார் செய்யப்பட்டு அனுப்பி வைக்க ப்படும் நிலையில் கடந்த மாதம் இந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டது. இது குறித்து புகார் எழுந்த நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை இணை இயக்குனர் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கு தாமதம் இன்றி ஊதியத்தை வழங்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தார். அதோடு சம்பளத்திற்கான பட்டியலை அலுவலகத்தில் சரியான நேரத்தில் சமர்ப்பித்து ஊதியத்தை உடனே வழங்க வேண்டும் என்று கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்..

Categories

Tech |