Categories
மாநில செய்திகள்

Happy News: குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000….. அரசு சூப்பர் அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பாலான தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன்பிறகு முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்ட ஸ்டாலின் மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதியில் குறிப்பிட்டு இருந்த அனைத்து நலத் திட்டங்களையும் ஒவ்வொன்றாக செய்து கொண்டே வருகிறார். அதன்படி குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில் திமுக தேர்தல் அறிக்கையில் கூறியபடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் கண்டிப்பாக நிறைவேற்றப்படும் என அமைச்சர் வேலு தெரிவித்துள்ளார். மேலும் பழனி, கொடைக்கானல் பாதையை தேசிய நெடுஞ்சாலையில் இணைத்து தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். கேரள அரசுடன் பேசி கொடைக்கானல் மற்றும் மூனாரு சாலையை தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |