அடையாளத் திருட்டுக்கு எதிரான பாதுகாப்பு மற்றும் டேட்டாக்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பை வழங்குவதற்கும், சர்வதேச பயணத்தை எளிதாக்கவும் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களுடன் இ-பாஸ்போர்ட்டுகளை மத்திய அரசு அறிமுகப்படுத்த தீவிரமாக செயல்பட்டு வருகிறது. இதுகுறித்து வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறுகையில், பாஸ்போர்ட் சேவைகளின் தரத்தை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என்பதன் காரணமாக வெகுவிரைவில் பாஸ்போர்ட் சேவா திட்டம் 2.0 திட்டத்தை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் தரம் உயர்த்தப்பட்ட, தாராளமயமாக்கப்பட்ட செயல்முறைகள், செயற்கை நுண்ணறிவு, சாட் போட் அட்வான்ஸ், அனலிடிக்ஸ் போன்ற வளர்ந்து வரும் தொழில் நுட்பங்கள் பயனுக்கு வரும் என்று கூறினார்.