Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: தமிழகம் முழுவதும் பள்ளி மாணவர்களுக்கு…. வெளியான சூப்பர் தகவல்….!!!!!

தமிழகத்தில் கொரோனா 3-வது அலைக்கு பிறகு கடந்த 1ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டு 1-12 வரையிலான வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மீண்டும் 5 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட இருப்பதாக தகவல்கள் வந்துள்ளது. தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்.19ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனால் அரசியல் கட்சியினர் வாக்கு சேகரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பணிகளை மேற்கொள்ள பள்ளி ஆசிரியர்கள், அலுவலர்களும் நியமிக்கப்பட்டு உள்ளனர். இதனால் பணிகளை மேற்கொள்ள தேவையான அறிவுரைகளை வழங்குவதற்காக ஆசிரியர்களுக்கு 3 கட்டங்களாக பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில் பள்ளி ஆசிரியர்கள் தேர்தல் பணியாளர்களாகவும் மற்றும் பள்ளிகள் வாக்குப்பதிவு மையங்களாகவும் செயல்பட இருப்பதால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

வரும் பிப்ரவரி 19ம் தேதி தேர்தல் நடைபெறுவதை தொடர்ந்து 22ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட இருக்கிறது. இதனால் பிப்ரவரி 19-22 வரை தொடர்ந்து 5 நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் இன்னும் வெளியாகவில்லை. ஆனால் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தலுக்கு பின் பள்ளிகள் மீண்டும் 23 ஆம் தேதி திறக்கப்பட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதன் காரணமாக மாணவர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர்.

Categories

Tech |