தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி, பருப்பு, சீனி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. மக்களும் குடும்ப அட்டையை வைத்து ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்கி பயனடைந்து வருகின்றனர். மேலும் குடும்ப அட்டை இல்லாத பலரும் புது ரேஷன் அட்டைக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இவர்களுக்கு சீக்கிரமாக கிடைப்பதில்லை.
இந்நிலையில் தமிழகத்தில் ரேஷன் கார்டு இல்லாதவர்கள் புதிதாக விண்ணப்பித்தால் 15 நாட்களுக்குள் வழங்கப்படும். ரேஷன் கார்டுக்காக காத்திருக்க வேண்டிய அவசியம் கிடையாது என்று அமைச்சர் பெரியசாமி தெரிவித்துள்ளார். தாமதமின்றி ரேஷன் அட்டைகளை வழங்க முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். தற்போது வழக்கத்தை விட மிக அதிகமாக விண்ணப்பங்கள் வருவதால் ரேஷன் கார்டு வழங்கும் நடைமுறை தாமதமாகி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.