தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் வாயிலாக ஏழை, எளிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இவர்களுக்கு அத்தியாவசிய பொருட்களான அரிசி, பருப்பு, எண்ணெய், கோதுமை போன்றவை ரேஷன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. அனைத்து ஏழை, எளிய மக்களும் இந்த அத்தியாவசிய பொருட்களை வாங்கி பயனடைய வேண்டும் என்ற நோக்கில் கைரேகை முறை அதாவது, பயோமெட்ரிக் முறையில் மக்களுக்கு பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் இந்த கைரேகை இயந்திரத்தில் அவ்வப்போது பல்வேறு சிக்கல்கள் இருந்து வருகிறது. அது என்னவென்றால் வயதானவர்களின் கைரேகை அந்த இயந்திரத்தில் பதியாததால் அவர்களை திருப்பி அனுப்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது. தமிழகத்தில் மட்டுமின்றி அனைத்து மாநிலங்களிலுமே இத்தகைய பிரச்சனை இருந்து வருகிறது. இதன் காரணமாக இது குறித்த நிறுவனமான (இந்தியத் தனித்துவ அடையாள ஆணையத்தின்) – (Unique Identification Authority of India -UIDAI) உயர் நிறுவனம் தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதன் காரணமாக இணைய இணைப்பு /தொழில்நுட்பத் தடைகளால் கைரேகை இயந்திரம் செயல்படாத நேரத்தில் குடும்ப அட்டை குறியீட்டு எண்ணை மின்னணு விற்பனை இயந்திரத்தில் ஸ்கேன் செய்வது மற்றும் குடும்ப அட்டை எண்ணை விற்பனை இயந்திரத்தில் உள்ளீடு செய்து ரேஷன் பொருட்களை விநியோகிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கைரேகை இயந்திரம் முழுமையாக சரிபார்க்கப்படும் வரையிலும் இந்த முறையை கடைபிடிக்க வேண்டும் என்று அனைத்து ரேஷன் கடைகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.