தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கொரோனா பேரிடர் காலத்திலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு அவர்களுக்கு அரசு பல்வேறு நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. அதுமட்டுமல்லாமல் தமிழக அரசின் அனைத்துத் துறைகளிலும் பல மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. மக்களுக்கு வேண்டிய அனைத்து நலத்திட்ட உதவிகளையும் முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொன்றாக செய்து கொண்டே வருகிறார். அது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இருக்கக்கூடிய அனைத்து காலி பணியிடங்களும் விரைவில் நிரப்பப்படும் என அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.மாதம் 30 நாட்களும் ரேஷன் கடைகளில் பொதுமக்களுக்கான பொருட்கள் விநியோகம் செய்யப்படும் என்றார். மேலும் ரேஷன் கார்டில் பெயர் நீக்கம், திருத்தம் மேற்கொள்ள மற்றும் புகார் தெரிவிக்க www.tnpss.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்.