கவிஞர் நடிகர் மற்றும் மக்கள் நீதி மைய கட்சியின் இளைஞரணி செயலாளராக பதவி வகிக்கும் சினேகாவுக்கும், நடிகை கன்னிகாவுக்கும் இன்று 10:45 திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணம் ஒரு காதல் திருமணம். எட்டு வருடங்களாக காதலித்து வந்த இவர்கள் தற்போது இரு வீட்டாரின் சம்மதத்துடன் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். கே பாலச்சந்தர் இயக்கத்தில் கலைஞர் டிவியில் அமுதா ஒரு ஆச்சரியக் குறி என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர். இதையடுத்து இவர் சரித்திரம் பேசு, சத்திரபதி, தேவராட்டம், அடுத்த சாட்டை என படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார்.
பின்னர் மீண்டும் சின்னத்திரைக்கு திரும்பி கல்யாணவீடு என்ற சீரியலில் நாயகியாக நடித்து வந்தார். அந்த சீரியலில் சூர்யா என்ற கதாபாத்திரத்தில் இவர் நடித்துள்ளார். இந்நிலையில் இன்று காலை பத்து முப்பது மணி அளவில் கவிஞர் சினேகன் மற்றும் கன்னிகாரவிக்கு வடபழனியில் மக்கள் நீதி மையத்தின் தலைவர் மற்றும் நடிகர் கமலஹாசன் தாலி எடுத்துக் கொடுத்து திருமணத்தை நடத்தி வைத்தார். இந்த திருமணத்திற்கு இயக்குனர் பாரதிராஜா மற்றும் திரைநட்சத்திரங்கள் பலரும் பங்கேற்று வாழ்த்து தெரிவித்தனர்.