Categories
சினிமா தமிழ் சினிமா

HAPPY NEWS: பிரபல நகைச்சுவை நடிகரின் மகன்… சப் கலெக்டராக நியமனம்…!!!

பிரபல நகைச்சுவை நடிகர் சின்னிஜெயந்தின் மகன் ஜெய் நாராயணன் தூத்துக்குடி மாவட்ட துணை ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் சின்னிஜெயந்த். இவரின் மூத்த மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன். இவர் கடந்த வருடம் சிவில் சர்வீஸ் தேர்வில் இந்திய அளவில் சாதனை படைத்தார். அந்த சிவில் சர்வீஸ் தேர்வில் அகில இந்திய அளவில் 75வது இடத்தைப் பெற்றார். இந்த தேர்வில் மொத்தம் 829 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ருதன் ஜெய் நாராயணன் தூத்துக்குடி மாவட்டத்தின் சப் கலெக்டராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து திரையுலகினரும், பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சின்னி ஜெயந்த் மகன் ஸ்ருதன் ஜெய் நாராயணன் கல்வி மூலமாக வெற்றி பெற்றிருப்பது திரை உலகிற்கே பெருமையாக இருக்கின்றது என்று ரஜினி பாராட்டியது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |