Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: புதுச்சேரியில் மார்ச் 27 முதல்…. மீண்டும் விமான சேவை….!!!!

இந்தியாவில் கடந்த 2020-ம் ஆண்டில் கொரோனா தொற்று பாதிப்பால், பாதுகாப்பு நலன் கருதி வெளிநாட்டு விமான சேவைக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. மேலும் முதல் அலையைத் தொடர்ந்து இரண்டாவது அலையும் தொடர்ந்ததால் சர்வதேச விமான சேவைக்கு விதிக்கப்பட்ட தடை நீடித்தது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று எண்ணிக்கை படிப்படியாக குறைந்து வருகிறது. இதனால், வரும் 27-ம் தேதி முதல் இந்தியாவில் இருந்து சர்வதேச விமான சேவைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து மார்ச் 27ம் தேதி முதல் புதுச்சேரியில் மீண்டும் விமான சேவையை தொடங்க உள்ளதாக ஸ்பைஸ் ஜெட் நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி மார்ச் 27ஆம் தேதி முதல், புதுச்சேரியில் இருந்து ஹைதராபாத் – பெங்களூருக்கு விமான சேவை தொடங்குகிறது. புதுச்சேரி- ஹைதராபாத் விமான சேவை மாலை 4.30மணிக்கும்,  புதுச்சேரி-பெங்களூர் விமான சேவை மதியம் 1.50-க்கும் தொடங்குகிறது. மேலும் விமான சேவைக்கான டிக்கெட் முன்பதிவு நேற்று முதல் தொடங்கியுள்ளது.

 

Categories

Tech |