Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: பென்ஷன் பணம் உயர்வு… இந்த வேகம் ரொம்ப அதிகம்…!!!!

பென்ஷன் திட்டங்களின் கீழ் உள்ள சொத்துக்கள் பிப்ரவரி மாத இறுதியில் உயர்ந்துள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேசிய பென்ஷன் திட்டம் மற்றும் அடல் பென்சன் யோஜனா போன்ற திட்டங்களின் கீழ் உள்ள சொத்துக்கள் 28 % உயர்ந்துள்ளதாக கடந்த பிப்ரவரி மாத இறுதியில் அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியிருக்கிறது. பென்ஷன் திட்டங்களில் முதலீடு செய்வது அண்மைக்காலமாக அதிகரித்து கொண்டே வருகிறது. தேசிய பென்ஷன் திட்டம் எல்லா முதலீட்டாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருக்கிறது. அதேபோல அடல் பென்ஷன் யோஜனா திட்டம் அமைப்புசாரா தொழிலாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதன் விளைவாக கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி வரை தேசிய பென்ஷன் திட்டம் அடல் பென்சன் திட்டங்களின் கீழ் மொத்தமாக உள்ள சொத்துக்கள் 28 % உயர்ந்து 7.17 லட்சம் கோடி ரூபாயை தொட்டுள்ளதாக இத்திட்டங்களை நிர்வகித்து வரும் பென்சன் ஒழுங்குமுறை ஆணையம் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி வரை தேசிய பென்ஷன் திட்டம், அடல் பென்ஷன் திட்டம் போன்றவற்றில் இருந்து சொத்துக்களின் மதிப்பு 5.59 லட்சம் கோடி ரூபாயாகும். தேசிய பென்ஷன் திட்டத்தில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை கடந்த பிப்ரவரி இறுதியில் அனைத்து 507.23 லட்சமாக அதிகரித்துள்ளது. தேசிய பென்ஷன் திட்டம் குறைந்த முதலீடு ஓய்வூதியத் திட்டம் இதில் 75 % வரை பங்குகளில் முதலீடு செய்ய அனுமதிக்கப் பட்டுள்ளது. முதலில் மத்திய அரசு ஊழியர்களுக்காக தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தில் பிற்காலத்தில் அனைவரும் முதலீடு செய்து கொள்ள  அனுமதிக்கப்பட்டது.

அடல் பென்ஷன் யோஜனா திட்டம் அமைப்பு சாரா தொழிலாளர்களின் பென்ஷன் பலன்களை பெறுவதற்காக  அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் குறைந்த முதலீட்டில் பென்ஷன் கணக்கை தொடங்கலாம். முதலீட்டு தொகைக்கு ஏற்ப பென்சன் தொகை மாறுபடும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Categories

Tech |