Categories
தேசிய செய்திகள்

Happy News: மக்களே…. வீட்டுக் கடன், கார் கடன், நகைக் கடன்…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!!

வீட்டுக் கடன் வாங்க திட்டமிட்டிருப்பவர்களுக்கு ஒரு மகிழ்ச்சிச் செய்தி வெளியாகியுள்ளது. பொதுத்துறை வங்கியான பேங்க் ஆப் மகாராஷ்டிரா வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைப்பதாக அறிவித்துள்ளது. Retail Bonanza-Festive Dhamaka சலுகையின் கீழ் வீட்டுக் கடன் வட்டி தற்போது குறைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு bank.of மஹாராஷ்டிராவில் வீட்டுக் கடன் வட்டி விகிதம் 6.80 விழுக்காடாக இருந்தது. இந்த நிலையில் முன்பு இல்லாத அளவுக்கு வீட்டுக் கடன்களுக்கான வட்டி விகிதத்தை 6.40 விழுக்காடாக குறைந்துள்ளது பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கி. அதுமட்டுமல்லாமல் கார் கடன்களுக்கு வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.

இதற்கு முன்பு bank.of  மகாராஷ்டிராவில் கார் கடன் வட்டி விகிதம் 7.05 விழுக்காடாக இருந்தது. இந்த நிலையில் தற்போது கார் கடன் வட்டி 6.80 விழுக்காடாக குறைக்கப்பட்டுள்ளது. புதிய வட்டி விகிதங்கள் அனைத்தும் இன்று முதல் அமலுக்கு வருவதாக அறிவித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் கார் கடன், வீட்டுக் கடன், நவல் கடன்களுக்கு பிராசஸிங் கட்டணத்தையும் தள்ளுபடி செய்துள்ளது. இந்த சலுகை மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் கடன்களில் நிறைய பணத்தை சேமிக்க முடியும் என்று வங்கியின் நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |