Categories
உலக செய்திகள்

HAPPY NEWS: மக்களே… 2022 ல் “இந்த வைரஸ்” ஒழிஞ்சிடும்….. பட் ஒன் கண்டிஷன்…. நம்பிக்கை தெரிவித்த WHO….!!

உலக சுகாதார அமைப்பு வியூகிக்கும் நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் கையாண்டாலே கொரோனா நடப்பாண்டில் முடிவுக்கு கொண்டு வந்து விடும் என்று அந்த நிறுவனத்தின்ப்
தலைவர் தெரிவித்துள்ளார்.

சீனாவில் முதன்முதலாக கடந்த 2019 ஆம் ஆண்டு தோன்றிய கொரோனா அனைத்து நாடுகளுக்கும் பரவி சுகாதார சீர்கேட்டினை உண்டாக்கியுள்ளது.

மேலும் பல உருமாற்றங்களை பெற்ற கொரோனா சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் ஓமிக்ரானாக மாறியுள்ளது.

இந்த ஓமிக்ரான் தற்போது உலக நாடுகளுக்கு பரவி கொரோனாவின் 3 ஆவது அலையை வீசத் தொடங்கியுள்ளது.

இந்நிலையில் உலக சுகாதார அமைப்பின் தலைவரான டெட்ரோஸ் அதனோம் நேற்று நடைபெற்ற 150 ஆவது அமர்வு கூட்டத்தில் முக்கிய தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார்.

அதாவது உலக சுகாதார அமைப்பு வியூகிக்கும் நடவடிக்கைகளை அனைத்து நாடுகளும் பயன்படுத்தினாலே நடப்பாண்டில் கொரோனா ஒழிந்துவிடும் என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |