Categories
தேசிய செய்திகள்

HAPPY NEWS: மத்திய அரசு ஊழியர்களுக்கு…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…..!!!!

இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்ததால், மத்திய அரசு அலுவலகங்களில் ஊழியர்களுக்கு கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டது. இது குறித்து வழிகாட்டி நெறிமுறைகள் கடந்த ஜனவரி மாதம் 3ஆம் தேதி வெளியிடப்பட்டது. அந்த வகையில்  அலுவலகங்களில் செயலாளருக்கு கீழ் நிலைக்கு உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், 50 சதவீதத்தினருக்கே அனுமதி வழங்கப்படும்.

இதையடுத்து மாற்றுத்திறனாளிகள், கர்ப்பிணிகளை வீட்டில் இருந்தே பணியாற்றலாம். அதன்பின் ஒரே நேரத்தில் அலுவலகத்தில் குவிவதை தடுப்பதற்காக 9 மணி முதல் 5.30 மணி வரை, 10 மணி முதல் 6.30 மணி வரை என்று மாற்று பணி நேரம் வழங்க வேண்டும். இதனிடையில் அலுவலகத்துக்கு வராத ஊழியர்கள் எப்போதும் தொலைபேசி (அல்லது) மின்னணு சாதனங்கள் மூலமாக தொடர்பு கொள்ளும் வகையில் இருக்க வேண்டும்.

மேலும் அவர்கள் வீட்டிலிருந்தும் பணியாற்ற வேண்டும். இந்த நடைமுறை ஜனவரி 31 ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் மத்திய அரசு அலுவலகங்கள் 50 சதவீத ஊழியர்களுடன் இயங்க அனுமதி அளிக்கப்பட்ட உத்தரவை, வரும் 15 ஆம் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் துணை செயலாளர் மற்றும் அதற்கு மேல் உள்ள அனைத்து அதிகாரிகளும் தவறாமல் அலுவலகத்திற்கு வர வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |