Categories
மாநில செய்திகள்

HAPPY NEWS: ரயில் பயணிகளே இன்று முதல் அனுமதி…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனையடுத்து கொரோனா பரவல் சற்று குறைந்து வந்ததை அடுத்து முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் இரவு நேர ஊரடங்கு தடை செய்யப்படும் என்றும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு கிடையாது என்றும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டார்.

முன்னதாக சென்னை புறநகர் ரயில்களில் பயணம் செய்யும்போது பயணிகள் கட்டாயம் 2 டோஸ் தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழை வைத்திருக்க வேண்டும். அதனை காண்பித்தால் தான் சீசன் டிக்கெட் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு வழங்கப்படும் என்று கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னை புறநகர் ரயில்களில் பயணச்சீட்டு வாங்குவதற்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் பிப்ரவரி 1 (இன்று) முதல் நீக்கப்படுகிறது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. தமிழக அரசு விதித்த கட்டுப்பாடுகள் திரும்ப பெறப்பட்டதால், ரயில்வே கட்டுப்பாடுகளும் நீக்கப்படுகிறது என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |