இந்தியாவில் பிரதான் மந்திரி கிசான் சம்மன் நிதி யோஜன திட்டம் விவசாயிகளுக்காக செயல்படுத்தப்பட்டு வருகிறது. 2 ஹேட்டர் வரை நிலம் வைத்திருக்கும் விவசாய குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலமாக ஒரு ஆண்டுக்கு ரூ.6000 நிதிஉதவி பெறுவார்கள். ஒவ்வொரு தவணையின் போதும் 2000 ரூபாய் வழங்கப்படும். இதுவரை மொத்தம் 9தவணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் 10 வது தவணை வழங்கப்பட உள்ளது.
அதாவது ஒவ்வொரு ஆண்டுக்கும் நான்கு மாதங்களுக்கு ஒரு முறை 2000 ரூபாய் வழங்கப்படும். இந்தப் பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது.இந்நிலையில் pm-kisan திட்டத்தின் கீழ் 9 வது தவணையில் நிதியுதவி கிடைக்கப் பெறாதவர்கள், அதனைப் போல கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதிக்குள் இணைந்த விவசாயிகள், இவர்களின் வங்கி கணக்கில் வரும் டிசம்பரில் 2000 ரூபாய்க்கு பதில் 4000 ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.