Categories
தேசிய செய்திகள்

Happy News: விவசாயிகளுக்கு சூப்பரான புத்தாண்டு பரிசு…. வெளியான மகிழ்ச்சி தகவல்….!!!!

பிரதான் மந்திரி கிசான் சம்மான் நிதி என்பது இந்திய அரசாங்கத்தின் ஒரு திட்டமாகும். இதில் அனைத்து சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கும் குறைந்த பட்ச வருமான ஆதரவாக ஆண்டுக்கு 6,000 ரூபாய் நிதி உதவி அளிக்கப்படும். இந்த திட்டத்தை கடந்த 2019 பிப்ரவரி மாதம் துவங்கப்பட்ட போது, சுமார் 1 கோடி விவசாயிகளின் பேங்க் அக்கவுண்டில் நேரடியாக தலா 2,000 ரூபாய் செலுத்தி இந்த திட்டத்தை பிரதமர் மோடி துவக்கி வைத்தார். விவசாயிகள் இந்த திட்டத்தில் சேரும் பட்சத்தில் ஒரு நிதியாண்டில் 3 முறை அவர்களின் பேங்க் அக்கவுண்டில் PM-KISAN தவணை நிதி 2,000 ரூபாய் வீதம் செலுத்தப்பட்டு வருகிறது.

இதன் மூலம் நிலம் வைத்திருக்கும் அனைத்து விவசாயி குடும்பங்களுக்கும் தலா 2,000 ரூபாய் வீதம் 3 தவணைகளில் ஆண்டுக்கு 6,000வருமான ஆதாரம் வழங்கப்பட்டு வருகிறது. இதுவரை இந்தத் திட்டத்தின் கீழ் 9 தவணை நிதி வழங்கப்பட்டுள்ள நிலையில், 10-வது தவணைக்காக நாடு முழுவதும் உள்ள விவசாயிகள் காத்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் விவசாய மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர தோமர் தகுதியான விவசாயிகளின் வங்கிக் கணக்கிற்கு ஜனவரி 1, 2022 ஆண்டு PM-KISAN திட்டத்தின் கீழ் 2,000 ரூபாய் போடப்படும் என்று ஒரு மெசேஜ் அனுப்பியுள்ளதாக இந்தியா டாட் காமில் வெளியிடப்பட்டுள்ள ஒரு அறிக்கை கூறுகிறது. மேலும் மத்திய அரசு சார்பாக தகுதியுள்ள விவசாயிகளின் மொபைல் நம்பர்களுக்கு ஒரு மெசேஜ் அனுப்பப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. அந்த மெசேஜில் PM-KISAN திட்டத்தின் கீழ் அடுத்த தவணையை 2022-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி பிரதமர் மோடி வெளியிடுவார் என்றும் விவசாயிகள், உற்பத்தியாளர் அமைப்புகளுக்கு சமபங்கு மானியம் வழங்குவார் என்றும் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது.

Categories

Tech |