ரயில்வே துறையில் வேலை பார்க்கும் ஊழியர்கள் சந்திக்கும் பொதுவான பிரச்சினை என்னவென்றால் வேலை பார்ப்பதற்காக வீட்டை விட்டு வெகு தூரம் செல்லும் சூழல் உள்ளது. இதனால் அவர்கள் தங்கள் வீட்டிற்கு பக்கத்தில் இடம் மாற்றம் வேண்டும் என்று நினைக்கிறார்கள். இந்த விஷயத்தில் அவர்களுக்கு தற்போது ஒரு இனிப்பான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது 13 லட்சம் ரயில்வே ஊழியர்கள் இடமாற்றம் அளிப்பதில் சுதந்திரம் அளிக்கும் விதமாக ரயில்வே வாரியம் ஒரு கொள்கையை தயாரித்துள்ளது. இதை நேற்று முதல் நாடு முழுவதும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
ரயில்வே ஊழியர்களுடைய இடமாற்றம் தொடர்பான இந்த சிக்கலை சமாளிப்பதற்காக ரயில்வே அமைச்சகம் நேற்று இடமாற்ற தொகுதியை அமல்படுத்த்தியது. இதன் கீழ் ரயில்வே மென்பொருள் தயாரிப்பு அமைப்பான ரயில்வே தகவல் அமைப்பு மையம் ஊழியர்களுடைய நிர்வாகத்திற்கான முக்கியமான தொகுதி ஒன்றை தயாரித்துள்ளது. இதற்கு HRMS என்று பெயரிட்டுள்ளது. இதன் மூலமாக ரயில்வே வாரியத்தின் படி மண்டலங்களுக்கு இடையான மற்றும் பிரிவுகளுக்கு இடையான இடமாற்றத்திற்கு அனைத்து விண்ணப்பங்களும் தாக்கல் செய்யப்படும்.
அது மட்டும் இன்றி யாருடைய இடமாற்ற விண்ணப்பம் ஏற்கனவே நிலுவையில் உள்ளதோ அதுவும் பதிவேற்றப்படும். இந்த தொகுதியை செயல்படுத்துவதன் மூலமாக இடமாற்றத்தில் வெளிப்படைதன்மை கொண்டுவரப்படும் என்று ரயில்வே ஊழியர்கள் கூறுகிறார்கள். ஊழியர்களின் இடம் மாற்றம் நேரம் வரும்போது அவர்கள் HRMS இல் விண்ணப்பிக்க முடியும். ஒரே இடத்துக்கு இரண்டு விண்ணப்பங்கள் வந்தால் முதலில் விண்ணப்பித்தவருக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.