தமிழக விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து கொள்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வலியுறுத்தி முதல்வர் ஸ்டாலின் மத்திய வேளாண் மற்றும் உழவர் துறை மந்திரி நரேந்திர சிங் தோமருக்கு கடிதம் எழுதி அனுப்பியுள்ளார். அதில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதனால் விவசாயிகளால் பொது சேவை மையங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவையை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே டெல்டா மாவட்ட விவசாயிகள் பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்.
கடந்த 14-ம் தேதி கடலூர் மற்றும் மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பாதிக்கப்பட்ட இடங்களை சென்று ஆய்வு செய்தேன். நவராத்திரி மற்றும் தீபாவளி பண்டிகை போன்ற தொடர்ச்சியான விடுமுறைகளின் காரணமாக பொது சேவை மையங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவைகளை விவசாயிகளால் பெற முடியாமல் போனது. தற்போது மழையின் விவசாயிகளால் பொது சேவை மையம் மற்றும் நிதி நிறுவனங்களின் சேவையை பெற முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
எனவே விவசாயிகள் பயிர் காப்பீடு பெறுவதற்கான கால அவகாசத்தை நவம்பர் 15-ம் தேதியிலிருந்து நவம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மேலும் சிவகங்கை, பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, திருவள்ளூர், விழுப்புரம், தர்மபுரி, ஈரோடு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், அரியலூர், திருச்சி, தேனி, ராமநாதபுரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருப்பூர், சேலம், கரூர், மதுரை, புதுக்கோட்டை, கடலூர், திருவள்ளுர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட 27 மாவட்டங்களில் நெல் சாகுபடி காண பயிர் காப்பீடு கால அவகாசத்தை நீட்டித்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.