Categories
மாநில செய்திகள்

விவசாயிகளுக்கு ஹேப்பி நியூஸ்….. பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசம் நீட்டிப்பு….. தமிழக அரசு அறிவிப்பு…..!!!!!

தமிழக விவசாயிகளுக்கு சம்பா பயிர் காப்பீட்டுக்கான கால அவகாசமானது நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி நவம்பர் 21-ம் தேதி வரை காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வேளாண்மை துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, பருவமழையின் பாதிப்பினால் பயிர்களை காப்பீடு செய்வதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி அனுப்பினார்.

இந்த கோரிக்கையை தற்போது மத்திய அரசு ஏற்று கால அவகாசத்தை நவம்பர் 21-ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது. இந்நிலையில் விவசாயிகளுக்கு காப்பீடு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப் பட்டுள்ளதால் சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளிலும், அதாவது நவம்பர் 19 மற்றும் 20 ஆகிய தேதிகளிலும் கூட்டுறவு கடன் சங்கங்கள், வங்கிகள், தொடக்க வேளாண்மை கூட்டுறவு மையங்கள் மற்றும் பொது சேவை மையங்கள் ஆகியவற்றை திறந்து வைக்க வேண்டும்.

மேலும் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ஈரோடு, திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, வேலூர், திருச்சி, தேனி, இராமநாதபுரம், செங்கல்பட்டு, திருப்பூர், சேலம், மதுரை, கடலூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகை, தஞ்சை, புதுக்கோட்டை, தர்மபுரி, கரூர், திருப்பத்தூர், சிவகங்கை, காஞ்சிபுரம், அரியலூர் மற்றும் திருவள்ளுர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் காப்பீடு செய்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Categories

Tech |