Categories
தேசிய செய்திகள்

ரயில் பயணிகளுக்கு ஹேப்பி நியூஸ்…. யுடிஎஸ் செயலியில் புதிய தளர்வுகள்…. வெளியான சூப்பர் அறிவிப்பு…..!!!!!!

இந்திய ரயில்வே நிர்வாகம் யுடிஎஸ் செல்லிடப்பேசி வசதியை கடந்த 2014-ம் ஆண்டு அறிமுகப் படுத்திய நிலையில், தற்போது புதிய தளர்வுகளை அறிவித்துள்ளது. அதாவது புறநகர் ரயில் பயணிகள் ரயில் டிக்கெட் எடுப்பதற்கு 5 கிலோமீட்டர் தொலைவுக்குள் இருக்க வேண்டும். இதேபோன்று புறநகர் அல்லாத பகுதிகளில் டிக்கெட் எடுப்பதற்கு பயணிகள் 2 கிலோமீட்டருக்குள் இருக்க வேண்டும். இதில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், 5 கிலோ மீட்டர் தூரமானது 20 கிலோமீட்டர் ஆகவும், 2 கிலோமீட்டர் தூரமானது 5 கிலோமீட்டர் ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது‌.

அதன் பிறகு யூடிஎஸ் செல்லிடபேசி வசதி பல வருடங்களுக்கு முன்பாகவே அறிமுகப்படுத்தப் பட்டிருந்தாலும் பலருக்கும் இந்த செயலி இருப்பது பலருக்கும் தெரியாததால் தற்போது தான் பயனாளர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. கடந்த 7-ம் தேதி முதல் புதிய வசதியானது நடைமுறைக்கு வந்துள்ளது.

இந்நிலையில் பயணிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பதை தவிர்க்க வேண்டும் என்பதற்காகவும், காகித பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்திலும் யுடிஎஸ் செல்லிடப்பேசி வசதியானது அறிமுகப்படுத்தப்பட்டது. மேலும் இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து பதிவிறக்கம் செய்வதோடு, பயணிகள் தங்களுடைய தனிப்பட்ட விவரங்களை பதிவு செய்து செல்போன் நம்பரை உறுதி செய்து கொண்டால் யுடிஎஸ் செல்லிடப்பேசி செயலியை பயன் படுத்திக் கொள்ளலாம்.

Categories

Tech |